Thursday, July 26, 2018

20-11-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 179 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

20-11-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 179
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒவ்வொருமுறை தலை துவட்டும் போதும்
வந்துபோகிறது புனல் இருந்ததாக
சொல்லி சென்ற தாத்தாவின் நினைவு...
நதிக்கரையெங்கும் எதிரொலிக்கும்
ஒற்றை குரலில் மிதக்க ஆரம்பித்தது பரிசல் ....
மணல் மூழ்கிய கடையாணியில்
தளும்பியது நேற்றைய ஆற்றின் காதல்..
சுழலில் சிக்கிக்கொண்ட ஆகாய தாமரை
சருகுகள் மேல் அமர்ந்து போனது தட்டான்கள்...
மதகு நிரம்பிய பொழுதுகளின் பயம்
யாருமற்ற பிரதேசத்தின் தனிமை வரியை
சுடுமணலில் எழுதிச்செல்கிறது யாருக்காகவோ ...
படித்துரையெங்கும் காய்ந்த சிப்பிகள் கண்ணாமூச்சி ஆட
தாத்தாவின் ஒற்றைக்கால் செருப்பாக
யாரும் கவனிக்காமல் கிடந்தது அந்த ஆறு...
புனலை பூட்டி வைத்தவர்களுக்கு
கடலின் ஆழம் அளக்க அழைக்கிறது இந்த கவிதை...
-நாகா

No comments:

neelam enbathu song