Thursday, July 26, 2018

10-12-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 193 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


10-12-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 193
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாரோ அழைத்தது போல்
திரும்பி பார்க்கிறேன் ஒவ்வொரு முறையும் ..
வெற்றிடத்தில் இருந்து கிளம்புகிறது
மழைநேர ஈசலை போல் ஞாபகங்கள்...
நேற்றைக்கு முன்தினம்
இப்படித்தான் நெடுநேரம் காத்திருந்தேன்
யாரும்வராமல் திரும்பிய போது கவனிக்கிறேன்
என்னைப்போல் ஒரு பட்டாம்பூச்சி
யார் வரவிற்க்கோ காத்திருந்து
மெல்ல சிறகசைத்து சென்றதை ...
கொடியில் இருந்து விழும் ஒரு பூவின்
அதி நுண்ணிய ஓசையில்
திரும்பி பார்க்கும் தோட்டத்தின் அசைவில்
உயிர்ப்பிக்கிறது சத்தங்களின் ஆதி மொழி ..
ஒரு மௌனம் காட்டாத திசை
அலைவரிசையில் கடத்துகிறது சொற்களை ...
பறவைகளின் சிறகசைப்பில்
வானத்தின் மொழி கவனிக்கப்படுகிறது ..
தெரிந்தவர்களை விட தெரியாதவர்களாலே
அதிகம் அழைக்கப்படுகிறோம் ...
இவராக இருக்குமோ என்பதில் இருந்து
ஆரம்பித்து அவராக இல்லை என்பதில்
முடிகிறது இந்த கவிதை ...
- நாகா

No comments:

neelam enbathu song