Thursday, July 26, 2018

13-12-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 195 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


13-12-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 195
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கத்தரிக்கப்பட்ட படங்களால்
ஒட்டப்பட்டிருந்தது சுவர்கள் ...
நூலாம்படைகளால் கிறுக்கப்பட்டிருந்த
சாளரங்களில் உள்நுழைந்தது சூரியன் ...
இட வலம் மறந்த நைலான் கயிறுகளில்
கவிதைகளாக தொங்கியது உள்ளாடைகள்..
படுக்கை விரிப்புகளில்
சின்னதும் பெரியதுமாக விண்மீன்கள் ..
தாழிடவும் திறக்கவும் இருக்கவே இருக்கிறது
பூட்டுகளை சுமக்கும் கதவுகள்...
நிழல் விழும் நிலங்களில்
அனிச்சையாக ஓடுகிறது எறும்புகள் ...
அணைக்க மறந்த மின்விளக்கில் இன்னும்
மிச்சமிருக்கிறது எரிவதற்கான நேரம் ..
யாருமில்லாத வீட்டுக்குள் இருந்து
வெளியேறிக் கொண்டிருக்கிறது இருட்டு...
அதை அறையென்று சொல்லி பழகிவிட்டேன்
புதிதாக நீங்கள் வந்தால் அப்படியே சொல்லுங்கள்...
- நாகா

No comments:

neelam enbathu song