Thursday, July 26, 2018

03-12-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 188 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


03-12-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 188
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு புத்தகம் நிறைய மேகம் அள்ளி
வைத்திருக்கிறாள் மகள்...
மயில்தோகை வைத்திருந்த
பக்கங்களில் தோகைவிரிக்க ஆரம்பித்தது மனசு ..
எழுத்துக்களில் நனைந்திருந்த
ஈரமுத்ததில் துளிர்த்தது வாழ்க்கை ...
ஒரு வெள்ளை வானவில்
நீலக் கொடியில் காய ஆரம்பித்தது...
சிலிர்க்கும் மென்வருடல்
தூரிகை குழப்பிய வண்ணத்தில்
மயிலாகி கொண்டிருந்தது நிமிடம் ...
மெய்யெழுத்துகளை உதிர்க்கும்
புன்னகையில் அர்த்தப்பட்டது முதல் முறையாக
அட்டைபோட்ட புத்தகத்தின்
முதல் பக்கத்தை புரட்ட ஆரம்பிக்கிறது காற்று ...
- நாகா

No comments:

neelam enbathu song