17-12-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 197
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 197
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மலையும் மலை சார்ந்த இடத்தில்
பெய்ய ஆரம்பிக்கிறது மழை ...
முகில்களை பனிக்கரங்களில் ஏந்தும்
குறிஞ்சிகளில் மிதக்க ஆரம்பிக்கிறது
காகித கப்பல்கள்...
அருவிகளின் கையெழுத்து
வனமெங்கும் நீள்கிறது ..
கிளை குடை விரிக்கும் மரங்களில்
கொத்துக்கொத்தாய் மழை ...
சரிவுகளில் ஓடும் ஆகாயம்
சமவெளி இறங்கி வெயில்காயும் ...
வெட்டி எடுத்த மலையின் துண்டொன்றில்
கண்விழிக்கிறது சிலை ..
உளியில் ஒலிக்க ஆரம்பிக்கலாம்
சிற்பியின் உறக்கம் தொலைத்த இரவுகள்...
பனி படர்ந்த காலைவேளை
மலைகளை சுமந்தபடி
ஓட ஆரம்பிக்கிறது அந்த காட்டாறு
மிதக்கிறேன் கவிதையாக நான் ....
பெய்ய ஆரம்பிக்கிறது மழை ...
முகில்களை பனிக்கரங்களில் ஏந்தும்
குறிஞ்சிகளில் மிதக்க ஆரம்பிக்கிறது
காகித கப்பல்கள்...
அருவிகளின் கையெழுத்து
வனமெங்கும் நீள்கிறது ..
கிளை குடை விரிக்கும் மரங்களில்
கொத்துக்கொத்தாய் மழை ...
சரிவுகளில் ஓடும் ஆகாயம்
சமவெளி இறங்கி வெயில்காயும் ...
வெட்டி எடுத்த மலையின் துண்டொன்றில்
கண்விழிக்கிறது சிலை ..
உளியில் ஒலிக்க ஆரம்பிக்கலாம்
சிற்பியின் உறக்கம் தொலைத்த இரவுகள்...
பனி படர்ந்த காலைவேளை
மலைகளை சுமந்தபடி
ஓட ஆரம்பிக்கிறது அந்த காட்டாறு
மிதக்கிறேன் கவிதையாக நான் ....
- நாகா
No comments:
Post a Comment