Thursday, July 26, 2018

20 -12-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 199 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

20 -12-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 199
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குளிர் ரசிக்க அழைக்கிறாள் தோழி
அவளின் காதலில் கதகதப்பாகிறது
என் மார்கழி காலைகள்...
பானம் நிரம்பிய கோப்பைகளாகிறோம்
தளும்புகின்றன சாலைகள் ...
என் உள்ளங்கையில் படரும் அவளின்
முகத்தில் பருக்களாகிறது பனித்துளி ..
அவளின் சுவாசம் சுமக்கும் போர்வையில்
நெளிகிறது என் படுக்கையறை...
காமத்தை கிடத்தி காதலில்
நடக்கிறோம் இருவரும் ...
மழை நனைவது போலில்லை
குளிரில் தொலைவது ...
முத்தங்களால் அவள் பின்னிய
குளிர்சட்டையில் பின்தொடர்கிறேன் அவளுடன் ...
ஒரு பின்னந்தியை நெற்றிப்பொட்டில்
சத்தமில்லாமல் பதிக்கிறேன் ..
அவள் பாதம் உரசிய பனிபுற்களில்
குட்டி அருவியை கொட்டி செல்கிறது ...
குளிரை ஆவிபறக்க உறிஞ்சிக்கொண்டிருந்த
எங்களுக்குள் முதல் முறையாக
குளிர் குளிர்காய தொடங்கியது ...
-நாகா

No comments:

neelam enbathu song