Wednesday, July 25, 2018

14 -01-2018 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 215 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


14 -01-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 215
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பனிபடர்ந்த காலையில்
மனசுக்குள் குடைபிடித்தது மார்கழி ...
ஒற்றையடி பாதையும் பல்லாங்குழி சிரிப்புமாக
செல்லமாய் சிணுங்க ஆரம்பித்தது
அந்த பூசணிப்பூ நினைப்பு...
முன்பதிவு செய்யாத ரயில் பயணம்
புதுப்பானையில் பொங்க ஆரம்பித்தது காதல்...
ஊருணி கடந்த ஊர்காற்றில்
வீச ஆரம்பிக்கிறது மண்வாசனை ...
கலயங்களில் ஒளிந்திருக்கும்
விதை நெல்லில் எட்டிப்பார்க்கிறது வியர்வை ..
நாற்றங்கால்களின் ஈரத்தில்
கொத்தி போகிறது வரப்புகளில் நிற்கும் கவிதை ...
மானாவாரி நிலத்தின் கொத்துக்கடலை போல
முகம் காட்டும் புன்செய்யில் கால்மிதித்து
அறுவடைக்கு தயாராகிறது நேசம் ....
-நாகா

Image may contain: one or more people, tree and outdoor

No comments:

neelam enbathu song