03 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 208
புதன்
ஒற்றையடிப்பாதை : 208
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வனம் தொலைத்த யானை ஒன்றை
நேற்று வழியில் சந்தித்தேன் ...
மலை சுமந்து நடக்கும் அதன்
பாதையெங்கும் நடந்துவந்தது ஒரு காட்டாறு ...
அதன் பிளிறலில் பூனையின் குரல்
லேசாக எட்டி பார்த்ததில்
தடுக்கி விழுந்தது அதன் பின்னங்கால்கள்...
தந்தங்களில் அமர்ந்து போனது
பின்னாளில் அதன் நினைவுகளில்
கூடுகட்டிய தட்டான்கள்...
நிலம் துழாவிய தும்பிக்கையில்
மண்வாசனையுடன் கலந்திருந்தது அதன் வனவாசனை...
பரணி மறந்திருந்த அதன் சுவடுகளில்
அங்குசத்தின் ரேகைகள் ஆருடமானது...
இருப்பிடங்களை விலக்கியிருந்த
ஒரு பெருவெளியில் கூட்டமாய் தொலைந்தது அது...
பாகனை முதன் முதலாக சந்தித்த
நாளின் பிற்பகலில் தொடங்கியது அதன் யாசகம் ..
சொல்ல ஆரம்பித்தது அந்த களிறு
தான் யானையாய் மாற ஆரம்பித்த கதையை...
வனம் சுமந்து நடக்கும் என்னை
ஒரு காடாக பார்த்திருக்கவேண்டும் அந்த யானை ..
இப்போது என்மீது சவாரி செய்ய தொடங்கியது அது
நான் வனம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ...
வனம் ஒரு புள்ளியாய் எங்களை
விழுங்க தொடங்கியது ,.....

- நாகா
No comments:
Post a Comment