Wednesday, July 25, 2018

11 -01-2018 வியாழன் ஒற்றையடிப்பாதை : 214 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

11 -01-2018 வியாழன்  ஒற்றையடிப்பாதை : 214  தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குளம்பொலிகள் கேட்டு அடிக்கடி
திடுக்கிடுகின்றன நரிகள் ..
அதன் பரிகளான கனவுகளில்
வந்து போகின்றன மகுடங்கள் ......
கானகம் எங்கும் அரிமாக்களின் தயவில்
நடக்கின்றன நரிகளின் தர்பார்...
கூர்தீட்டிய அதன் செத்த மூலையில்
படர்கின்றன திராட்சை கொடிகள்...
எப்போதோ சாயத்தொட்டிக்குள் விழுந்த
கிழட்டு நரி ஒன்றின் ஊளையில்
நனைய ஆரம்பித்தது ஒரு கோடைமழை ...
தந்திரங்களை களவாடிய பூனைகளும்
சரித்திரங்களை எழுதிக்கொண்டிருக்கும் மந்திகளும்
பேசத்தொடங்குகின்றன காகங்களையும்
வடைச்சுடும் பாட்டிகளையும் பற்றி ...
நரிகளின் நாட்டாமையில்
செங்கோல்களை தேட ஆரம்பிக்கின்றன சிங்கங்கள்...
- நாகா

No comments:

neelam enbathu song