Wednesday, July 25, 2018

08 -01-2018 திங்கள் ஒற்றையடிப்பாதை : 211 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

08 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 211
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஆயிரம் முத்தங்களுடன்
இப்படித்தான் ஒவ்வொரு முறையும்
கடிதத்தை முடித்திருப்பாள் அவள்...
வார்த்தைகளில் நெளியும் காதல்
சிலநேரம் பரமபத ஏணியாகும்
பலநேரம் பாம்புகளாகவும் மாறும் வினோதம் நிகழும்...
உதடுகளில் வார்த்தைகளும்
கடிதங்களில் முத்தங்களையும்
லாவகமாக கொடுத்தனுப்புவதில் கெட்டிகாரி...
வரும் கடிதங்களை உதறிவிடக்கூடாது
சிலநேரம் தட்டான்களும் பலநேரம்
பட்டாம்பூச்சிகளும் பறந்துபோகும் ...
எழுத்து பிழைகளில் உலர ஆரம்பிக்கும்
அவள் கனவுகளில் கட்டைவிரலும்
ஆட்காட்டிவிரலும் குவித்தபடி
என்னை பிடிக்க ஓடிவரும்
சிண்ட்ரெல்லாவாகும் அவள் காதல் ..
ஆயிரங்களில் ஒருத்தியாக இன்னும்
ரெட்டைஜடை பின்னலில்
மஞ்சள் கனகாம்பரத்தில் புன்னகைத்தடி
நடந்துகொண்டுதான் இருக்கிறாள்
நேற்றைய நதி நடந்த இடத்தில
சிறு ஓடையாக என்னை ஈரப்படுத்தியப்படி....
- நாகா

No comments:

neelam enbathu song