26-11-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 183
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு வெள்ளை ரோஜா ஒரு கருப்பு ரோஜா
ஒரு தொட்டியில் இரண்டு பூக்கள் ..
கருப்பு ரோஜாவை மொய்க்க ஆரம்பித்தது
வண்டுகளும் சில வண்ணாத்தி பூச்சிகளும் ...
உதிரும் இதழ்களை சேகரிக்கும் விரல்களை
மிக அக்கறையாக பார்க்க ஆரம்பித்தது அது ....
வெள்ளைரோஜாவை பறித்துப்போனாள்
முள்குத்திய விரல்களுடன் ஒருத்தி ...
நீண்ட கூந்தலில் சூடிக்கொண்ட பின்னந்தி பொழுதில்
வெள்ளையாக இருந்த இடத்தை கருப்பு வண்டு
ஆக்ரமித்ததில் அந்த மண் தொட்டி
முதல் முறையாக புன்னகைத்தது ...
தொட்டி செடியும் பூக்கும் பூவுமான
அந்த ஜன்னலுக்கருகில்
நுழைந்து வந்தது தோட்டத்து வாசம் ...
காற்றின் மொழிபெயர்ப்பில்
நாளை ஒரு வண்ணத்து பூச்சி
சுற்றிஅலையலாம் உடைந்த தொட்டியில்
உதிராமல் இருக்கும் கருப்பு பூவைத்தேடி ...
ஒரு தொட்டியில் இரண்டு பூக்கள் ..
கருப்பு ரோஜாவை மொய்க்க ஆரம்பித்தது
வண்டுகளும் சில வண்ணாத்தி பூச்சிகளும் ...
உதிரும் இதழ்களை சேகரிக்கும் விரல்களை
மிக அக்கறையாக பார்க்க ஆரம்பித்தது அது ....
வெள்ளைரோஜாவை பறித்துப்போனாள்
முள்குத்திய விரல்களுடன் ஒருத்தி ...
நீண்ட கூந்தலில் சூடிக்கொண்ட பின்னந்தி பொழுதில்
வெள்ளையாக இருந்த இடத்தை கருப்பு வண்டு
ஆக்ரமித்ததில் அந்த மண் தொட்டி
முதல் முறையாக புன்னகைத்தது ...
தொட்டி செடியும் பூக்கும் பூவுமான
அந்த ஜன்னலுக்கருகில்
நுழைந்து வந்தது தோட்டத்து வாசம் ...
காற்றின் மொழிபெயர்ப்பில்
நாளை ஒரு வண்ணத்து பூச்சி
சுற்றிஅலையலாம் உடைந்த தொட்டியில்
உதிராமல் இருக்கும் கருப்பு பூவைத்தேடி ...
- நாகா
No comments:
Post a Comment