Thursday, July 26, 2018

12-11-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :175 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


12-11-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :175
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மீன் பிடித்தலுக்காக கொஞ்சம் இரையும்
நிறைய தூண்டிலுமாக நான் ....
குளம் தேடி பறக்கும் கொக்காகிறபோது
அநேகமாக தளும்ப ஆரம்பிக்கறது மனசு ...
கருவாடுகளாகிப்போன
நேற்றைய மீன்களின் கதைகளில்
கரைகிறது வாழ்வின் வற்றாத நதி .....
குளக்கரையில் கால் உரசி போன மீனின் சிலிர்ப்பில்
கண்விழிக்கிறது சில காதல் ..
தண்ணீரை கிழித்து உள்புகும் கனவை
ஒரு தூண்டில் இழுத்து கரையில் போட தயாராகிறது ...
இரை தொலைத்த தூண்டில்களில்
வீசியவனே சிக்கிக்கொள்ளும் விபரீதத்தில்
எழுத ஆரம்பிக்கிறது இந்த கவிதை
என்னை மீனாகவும் தன்னை தூண்டிலாகவும்..
-நாகா

No comments:

neelam enbathu song