12-12-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 194
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 194
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கண்ணீரை கண்ணீரால் எழுதும்
கவிதை எழுத முனைகிறேன்
நனைகிறது காகிதம் ...
மிதக்கும் வார்த்தைகளை துடைத்து
வெயிலில் காயப்போடுகிறான் ஒருவன் ...
யாரோ ஒருவன் வீசிய தூண்டிலில்
தளும்புகிறது குளம் ...
வெற்றிடமான அறைக்குள் இருந்து
ஒலிக்கிறது சிரிப்பொலி ...
ஒரு மிருதுவான வெப்பம் படரும்
பின்னங்கழுத்தில் ஊர்கிறது ஞாபகம் ..
ஊஞ்சலில் அமர்ந்த அந்த புகைப்படம்
அசைத்து பார்க்கிறது என்னை ...
இனி இல்லை என்பதான நிஜம்
சேகரிக்கிறது அனைத்தையும் ...
கவிதை எழுத முனைகிறேன்
நனைகிறது காகிதம் ...
மிதக்கும் வார்த்தைகளை துடைத்து
வெயிலில் காயப்போடுகிறான் ஒருவன் ...
யாரோ ஒருவன் வீசிய தூண்டிலில்
தளும்புகிறது குளம் ...
வெற்றிடமான அறைக்குள் இருந்து
ஒலிக்கிறது சிரிப்பொலி ...
ஒரு மிருதுவான வெப்பம் படரும்
பின்னங்கழுத்தில் ஊர்கிறது ஞாபகம் ..
ஊஞ்சலில் அமர்ந்த அந்த புகைப்படம்
அசைத்து பார்க்கிறது என்னை ...
இனி இல்லை என்பதான நிஜம்
சேகரிக்கிறது அனைத்தையும் ...
- நாகா
No comments:
Post a Comment