Thursday, July 26, 2018

07-12-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 192 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

07-12-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 192
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நிசப்தமான இடத்தில் தான்
தனிமை விரிக்கிறது காற்று ...
இலைகளின் வழியே கால்தடம் தேடி
பயணிக்கிறது சூரியன் ...
காட்டுப்பூக்களின் வாசனையில்
கண்விழிக்கிறது அருவியின் ஈரம் ..
இணைப்பு சொற்களின் இடைவெளியில்
இளைப்பாறுகிறது கனவு ...
விதைகளை உரசும் நிலத்தில்
மொட்டுவிடுகிறது ஏக்கம் ..
யாரும் இல்லாத இடத்தில்
ஏற்றப்படுகிறது தீபங்கள் ...
தீவுகளில் இருந்து கரையேற
பிரியம் காட்டுவதில்லை இந்த கவிதை ...
- நாகா

No comments:

neelam enbathu song