Thursday, July 26, 2018

19-12-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 198 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

9-12-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 198
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாருமற்ற சாலையில்
பயணிக்கும் ஒற்றை நிழலாகிறேன் நான்...
தடயம் தேடி அமர்ந்து செல்கிறது
ஒரு பயணத்தின் துணைத்தேடும் தவிப்பு...
மௌனங்களற்ற இந்த கவிதையை போல
வழி நெடுக நட்டு வைக்கிறது
அதன் நிழல் குடைகளை....
ஒரு வழிப்போக்கனை தேடி காத்திருக்கும்
உதிர தொடங்கும் மலரை போல
நிதானமாக அசைகிறது அதன் இருப்பு.....
சாயம் போன வெளிச்சத்தில்
உறைந்து நிற்கிறது அதன் தனிமை ...
இரைச்சல்களில் இறைந்து கிடந்த
அதன் இதயத்தின் துணுக்குகளில்
மொய்க்க ஆரம்பிக்கின்றன ஞாபக எறும்புகள்...
நேற்றைக்கும் நேற்று பயணங்களை
கவனித்த அதன் கண்களில்
எட்டி பார்க்கிறது தாகத்தின் பார்வை ...
காணாமல் போனவனை அரவணைத்த திருப்தியில்
நெளிந்து கொண்டிருக்கிறது
இரை விழுங்கிய மலைப்பாம்பாய் அதன் நிசப்தம் ....
- நாகா

No comments:

neelam enbathu song