09-11-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை :174
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த மரங்கொத்தியுடன்
ஒருநாள் வனத்தில் காணாமல் போனேன் ...
பின்வாசல் முற்றத்தில் பாடிக்கொண்டிருந்த
வானம்பாடியிடம் அது அறிமுகம் செய்தது ..
பின்னொருநாள் இருவரும் இனைந்து
மீன்கொத்தியை சந்திக்க போனோம் ...
தந்தி கம்பிகளில் அமர்ந்த குருவிகளை
விரட்டிக்கொண்டிருந்த ஒரு அந்தி மாலையில்
மழை ஏந்த ஆரம்பித்தோம் அனைவரும் ...
சிறகுகள் உலர்த்தும் நேரத்தில் கவனமாக
ஆகாயம் உரசி சாளரம் திறந்தோம் ...
கூடுகள் பற்றி கவலையில்லாமல்
பறந்து கொண்டிருக்கும் வல்லூறுகளை
திசைகளில் தேடி திரிந்தது மனசு ..
எனக்குள் இறக்கைகள் முளைக்க ஆரம்பிக்க
பறவைகளை பார்க்கிறேன்
அது ஒரு மனிதனாய் என்னை பார்த்து சிரித்தது ..
உடன் பறக்கும் என் ஆசையில்
அதன் இருப்பிடம் கூடுகள் தொலைக்க
நான் பறக்கும் பறவை நிழல் தேடி நடக்கிறேன் ..
ஒரு பறவை மனிதனானதும்
ஒரு மனிதன் பறவையாய் ஆனது அப்போதுதான் ...
இதனால் அறிவிக்கப்படும் செய்தி
பறவைகள் பறக்கமட்டும் செய்வதில்லை....
ஒருநாள் வனத்தில் காணாமல் போனேன் ...
பின்வாசல் முற்றத்தில் பாடிக்கொண்டிருந்த
வானம்பாடியிடம் அது அறிமுகம் செய்தது ..
பின்னொருநாள் இருவரும் இனைந்து
மீன்கொத்தியை சந்திக்க போனோம் ...
தந்தி கம்பிகளில் அமர்ந்த குருவிகளை
விரட்டிக்கொண்டிருந்த ஒரு அந்தி மாலையில்
மழை ஏந்த ஆரம்பித்தோம் அனைவரும் ...
சிறகுகள் உலர்த்தும் நேரத்தில் கவனமாக
ஆகாயம் உரசி சாளரம் திறந்தோம் ...
கூடுகள் பற்றி கவலையில்லாமல்
பறந்து கொண்டிருக்கும் வல்லூறுகளை
திசைகளில் தேடி திரிந்தது மனசு ..
எனக்குள் இறக்கைகள் முளைக்க ஆரம்பிக்க
பறவைகளை பார்க்கிறேன்
அது ஒரு மனிதனாய் என்னை பார்த்து சிரித்தது ..
உடன் பறக்கும் என் ஆசையில்
அதன் இருப்பிடம் கூடுகள் தொலைக்க
நான் பறக்கும் பறவை நிழல் தேடி நடக்கிறேன் ..
ஒரு பறவை மனிதனானதும்
ஒரு மனிதன் பறவையாய் ஆனது அப்போதுதான் ...
இதனால் அறிவிக்கப்படும் செய்தி
பறவைகள் பறக்கமட்டும் செய்வதில்லை....
- நாகா
No comments:
Post a Comment