Thursday, July 26, 2018

21-11-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 180 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

21-11-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 180
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சூரிய பிறையின் நிழலில்
கண் விழிக்கிறது நிலவு ..
முகம் பார்க்கும் கண்ணாடியில்
ஒப்பனை செய்து கொள்கிறது பகல் ...
கிரண விழுதுகளை பிடித்து
உச்சித்தொட எழுகிறது மரம் ..
கதிர் சுற்றும் மதி
அடிவயிறு தடவி பார்க்கும் ...
சூரியகாந்தியின் மகரந்தம்
அல்லிக்கொடியில் தலைவாரி கொண்டது..
சூரிய இரவு சந்திர பகல்
விழுங்கபார்க்கிறது யாமம் ..
நிலவு குளித்து எழும் சூரியன்
சூரிய போர்வை உதறி எழும் நிலா ..
கானகம் எங்கும் தனித்து
பயணிக்கும் மின்மினி ...
தீப்பெட்டிக்குள் தூங்கும்
பொன்வண்டாகிறது பௌர்ணமி ..
ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடம் தேடும் நகர்வில்
சுழல்கிறது பூமி நிதானமாக
எல்லாவற்றையும் அவதானித்தபடி ....
- நாகா

No comments:

neelam enbathu song