RJ Naga
01-05-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 50
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அதுக்கு மேல யோசிக்க முடியாது
இருந்தாலும் செஞ்சுதான் ஆகணும் ...
காஞ்ச மீனாட்டம் நதி ரொம்பிய பொழுதை
நெனைக்க வைக்குது தூரத்து மண் வாசம் ..
எருக்கஞ்செடி பக்கத்துல
கெடக்கும் ஒத்த செருப்பாட்டம்
தனிச்சு நிக்குது சிறுக்கி மவ மனசு ...
பத்தாயம் நிரப்புற மாதிரி
என்னை நிரப்பிட்டு போய்ட்டான்
அன்பின் சிராய்ப்பில் இப்போ எரிச்சலுக்கு பதில்
அவன் நெனப்பு களிம்பு பூசவே செய்யுது ...
முனை முறிந்த பூவை கிள்ளி
மாலை தொடுக்க ஆசைப்பட்ட விரல்களில்
முள் கீறிய தழும்பு கண்ணாமூச்சி ஆடுது ...
அவனின் தாகம் என்னை குடிக்க ஆரம்பிக்கறப்ப
கரையை நோக்கி நடந்துகிட்டு இருந்தேன் ...
சுடுமணல்ல காதல் ஆவியாகி கொண்டிருப்பது தெரியாமல்
ஈரம் சொட்ட கடந்து போகுது
கொடியில் காயும் துணிபோல வாழ்க்கை ...
இருந்தாலும் செஞ்சுதான் ஆகணும் ...
காஞ்ச மீனாட்டம் நதி ரொம்பிய பொழுதை
நெனைக்க வைக்குது தூரத்து மண் வாசம் ..
எருக்கஞ்செடி பக்கத்துல
கெடக்கும் ஒத்த செருப்பாட்டம்
தனிச்சு நிக்குது சிறுக்கி மவ மனசு ...
பத்தாயம் நிரப்புற மாதிரி
என்னை நிரப்பிட்டு போய்ட்டான்
அன்பின் சிராய்ப்பில் இப்போ எரிச்சலுக்கு பதில்
அவன் நெனப்பு களிம்பு பூசவே செய்யுது ...
முனை முறிந்த பூவை கிள்ளி
மாலை தொடுக்க ஆசைப்பட்ட விரல்களில்
முள் கீறிய தழும்பு கண்ணாமூச்சி ஆடுது ...
அவனின் தாகம் என்னை குடிக்க ஆரம்பிக்கறப்ப
கரையை நோக்கி நடந்துகிட்டு இருந்தேன் ...
சுடுமணல்ல காதல் ஆவியாகி கொண்டிருப்பது தெரியாமல்
ஈரம் சொட்ட கடந்து போகுது
கொடியில் காயும் துணிபோல வாழ்க்கை ...
- நாகா
No comments:
Post a Comment