Tuesday, September 4, 2018

11-06-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 78 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
11-06-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 78
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நிழல் உதிர்க்கும்
மரக்கிளையில் இருந்து
விழுந்தது அந்த மைனா குஞ்சு ...
ரெக்கை முளைக்க ஆரம்பிக்கும் நேரம்
முறிந்திருந்தது அதன் சிறகு ...
உள்ளங்கையில் ஒரு பஞ்சு குவியலாக
புது விருந்தாளியாய் வீடு நுழைந்தது அது ...
வீட்டிற்குள் உருவாக தொடங்கியது
ஒரு புது ஆகாயம் ...
ஜன்னல் கம்பிகளை உரசி
நடைபழகியது அது பிற்பாடு ...
மைனாவின் குரலில்
துயில் நீங்கியது எங்கள் படுக்கை ...
கிளைவிரிக்கும் அதன் சிநேகத்தில்
வேர் விட ஆரம்பித்தது நிகழ்..
சுத்தமாய் பறத்தலை மறந்திருந்த
அந்த மைனாவுடன் நடக்க ஆரம்பித்தேன்
உதிர்ந்த அதன் சிறகுகளில்
முளைக்க ஆரம்பித்திருந்தது
குட்டி குட்டி நட்சத்திரங்கள் ..
- நாகா

No comments:

neelam enbathu song