RJ Naga
15-04-2017
சனிக்கிழமை
சனிக்கிழமை
ஒற்றையடிப்பாதை : 38
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கருவக்காட்டுக்குள்ள
ரெட்டை வால் குருவிக்கு என்ன வேலை
சத்தமே இல்லாம ராட்டினம் ஒண்ணு
அந்தரத்துல சுத்துதே
பாதகத்தி நான் எதை கொண்டு மறைக்க .. ...
காத்தாழ முள்ளுக்குத்தி
கருவாச்சி கனவுக்கு வேலிபோடுதே
தலையணை ஈரத்தை
எங்க போய் நான் தொலைக்க...
ஊத்து தண்ணியாட்டம்
விரல் புடிச்சு ஓடுது பனை ஓலை காத்தாடி
மூச்சு வாங்கலாம் கத்திரி வெயில் திண்ணையில ...
கெளுத்தி மீனாட்டம்
நெஞ்சுக்குள்ள துள்ளுது
மஞ்சக்காணியாட்டம் பொசுக்குன்னு பூத்த பூ
பறிச்சு சூடிக்கொள்ள
ஆசைப்படும் ரெட்டை ஜடை ....
செம்மண்ணை கொழச்சி
விரிசல் சுவரை பூசி மெழுகுது
நேசம் வெச்ச நெனப்பு
கடலை காடாட்டம் ஆகாசம் பாக்குது இப்போது ......
தொவைச்ச துணியாட்டம்
எல்லாம் வெளுத்து கெடக்கயில
வெள்ளாவி பக்கத்துல பக்கத்துல
காத்திருக்கும் வெட்கம் ஒண்ணு ...
சுண்டு விரல் பிடிச்சு
கூட்டிப்போக ஒரு வழிகாட்டி மரத்துக்கு
விழிவெச்சு காத்திருக்கேன் ...
ரெட்டை வால் குருவிக்கு என்ன வேலை
சத்தமே இல்லாம ராட்டினம் ஒண்ணு
அந்தரத்துல சுத்துதே
பாதகத்தி நான் எதை கொண்டு மறைக்க .. ...
காத்தாழ முள்ளுக்குத்தி
கருவாச்சி கனவுக்கு வேலிபோடுதே
தலையணை ஈரத்தை
எங்க போய் நான் தொலைக்க...
ஊத்து தண்ணியாட்டம்
விரல் புடிச்சு ஓடுது பனை ஓலை காத்தாடி
மூச்சு வாங்கலாம் கத்திரி வெயில் திண்ணையில ...
கெளுத்தி மீனாட்டம்
நெஞ்சுக்குள்ள துள்ளுது
மஞ்சக்காணியாட்டம் பொசுக்குன்னு பூத்த பூ
பறிச்சு சூடிக்கொள்ள
ஆசைப்படும் ரெட்டை ஜடை ....
செம்மண்ணை கொழச்சி
விரிசல் சுவரை பூசி மெழுகுது
நேசம் வெச்ச நெனப்பு
கடலை காடாட்டம் ஆகாசம் பாக்குது இப்போது ......
தொவைச்ச துணியாட்டம்
எல்லாம் வெளுத்து கெடக்கயில
வெள்ளாவி பக்கத்துல பக்கத்துல
காத்திருக்கும் வெட்கம் ஒண்ணு ...
சுண்டு விரல் பிடிச்சு
கூட்டிப்போக ஒரு வழிகாட்டி மரத்துக்கு
விழிவெச்சு காத்திருக்கேன் ...
- நாகா
No comments:
Post a Comment