RJ Naga
17-04-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 40
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கள்ளிச்செடியில
காஞ்சிப்போய் இருந்தாலும்
முள் கீறி எழுதிவச்ச பேரு
இன்னும் பூவா பூத்திருக்கு ..
ஆடு மேய்ஞ்சதில்ல இதுவரை...
காஞ்சிப்போய் இருந்தாலும்
முள் கீறி எழுதிவச்ச பேரு
இன்னும் பூவா பூத்திருக்கு ..
ஆடு மேய்ஞ்சதில்ல இதுவரை...
பள்ளிக்கூட பெஞ்சுல
செவனோ கிளாக் பிளேடால
பெயர் எழுதின இடத்திலதான்
இப்போ யார்யாரோ படிக்கறாங்க...
செங்கல் சுவருக்கும் மூச்சு வாங்கலாம் இனிமேல..
செவனோ கிளாக் பிளேடால
பெயர் எழுதின இடத்திலதான்
இப்போ யார்யாரோ படிக்கறாங்க...
செங்கல் சுவருக்கும் மூச்சு வாங்கலாம் இனிமேல..
தூசு படிஞ்சு நின்ன
அம்பாசிடர் காருல
எழுதி வச்ச இடத்தில்தான்
முளைச்சிருக்கு காம்ப்ளெக்ஸ் ...
கார் எங்க போச்சு ஓனருக்கும் தெரியல...
அம்பாசிடர் காருல
எழுதி வச்ச இடத்தில்தான்
முளைச்சிருக்கு காம்ப்ளெக்ஸ் ...
கார் எங்க போச்சு ஓனருக்கும் தெரியல...
முதல் தடவ பீச் பாக்க போனப்ப
உள்ளங்கை அழுந்த கொடுத்த
கிளிஞ்சலில் பேர்பார்த்து
ரெக்க கட்டி பறந்திருக்கேன் ...
கால் தொட்ட அலைகளில்
உடைஞ்சு போச்சு கண்ணீர் துளி ..
உள்ளங்கை அழுந்த கொடுத்த
கிளிஞ்சலில் பேர்பார்த்து
ரெக்க கட்டி பறந்திருக்கேன் ...
கால் தொட்ட அலைகளில்
உடைஞ்சு போச்சு கண்ணீர் துளி ..
ஒத்த அரிசியில்
என் மொத்த பெயர் எழுதி
பொறந்த நாள் பரிசா
கொடுத்துப்போன மறுநாள்
குருவி கொத்தி போக
நடுக்கூடம் கடலாச்சு ...
ஒன்ன தொலைச்சு
ஒன்ன தேடுற ஒத்த வாழ்க்கை
என்னை தொலைக்க வச்சு
உன்னில் தேடுற
ரகசியம் கண்டுகிட்டேன்...
சாவி தொலைச்சுட்டு
பூட்டிக்கிடக்குது
சுவரெல்லாம் உன் பேரு ....
உதிர்வதற்குள் வரப்பாரு ....
என் மொத்த பெயர் எழுதி
பொறந்த நாள் பரிசா
கொடுத்துப்போன மறுநாள்
குருவி கொத்தி போக
நடுக்கூடம் கடலாச்சு ...
ஒன்ன தொலைச்சு
ஒன்ன தேடுற ஒத்த வாழ்க்கை
என்னை தொலைக்க வச்சு
உன்னில் தேடுற
ரகசியம் கண்டுகிட்டேன்...
சாவி தொலைச்சுட்டு
பூட்டிக்கிடக்குது
சுவரெல்லாம் உன் பேரு ....
உதிர்வதற்குள் வரப்பாரு ....
- நாகா
No comments:
Post a Comment