Tuesday, September 4, 2018

29-05-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 70 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
29-05-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 70
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கிடைக்குள் சிக்கிய
ஆட்டுக்குட்டியாக தான் கிடந்திருக்கிறேன் ....
மேய்ச்சலின் நினைவு
மெல்ல அசைபோடுகிறது இப்போது ...
உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்
சுரைக்குடுவைக்குள் நிரம்பி வழியும்
விதைகளாக அது கலகலக்கும்...
நுகத்தடிகளாக மனம் கீறிச்செல்லும்
கண்மாய்கரை காற்றில்
அய்யார் எட்டும் பொன்னியும் சிணுங்க தொடங்கும் .....
நடவு பெண்களின் ரப்பர் வளையல்களாக
ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது மெதுவாக ...
கண்டாங்கியில் முடிந்து வைத்திருக்கும்
மழைஞாபகம் இதயம் நனைத்து போகிறது ...
சட்டியில் துள்ளும் கெண்டைமீனாக
கிடந்து அலையும் அதன் இருப்பில்
உப்பு காரத்தின் ஒட்டு மொத்த அத்து மீறல் ...
சுடுமணலில் படர்ந்திருக்கும்
தளிர்க்கொடியை போல பற்றி படர காத்திருக்கிறது
அந்த நிலா வெளிச்சத்தில்
பனைமரங்களின் சலசலப்புக்கிடையில்
அரவங்களின் அழகான கவிதை ....
- நாகா

No comments:

neelam enbathu song