Tuesday, September 4, 2018

16-05-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 61 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
16-05-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 61
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வால் முளைத்த குதிரைகளும்
மந்திர கோள்களை தேடி அலையும்
சூனியக்கார கிழவிகளும்
ஏழுகடல் ஏழு மலை தாண்டி
பச்சைக்கிளிகளுடன்
நெருப்பு துண்டங்களை விழுங்கும்
மூன்று கண் அரக்கர்களும்
சுண்டுவிரலை கடனாக கேட்கும்
கொள்ளிவாய் பிசாசும்
தோட்டத்தில் பூக்களை
பூப்பிக்கும் தேவதைகளுமாக
வந்து போகின்றனர் ஒவ்வொரு ராத்திரியும் ..
கன்னித்தீவு கதையில் லைலாவாகவும்
பல நேரங்களில் சிந்துபாத்தாகவும்
கடவுச் சொல் மறந்த
அலிபாபா குகை போலவும்
பூதம் தொலைத்த அலாவுதீன் விளக்குமாகவும்
மாறிப்போகிறது ...
கமண்டலத்தை உருட்டிய
காகமாக காவிரியில் நனைகிறது
இப்போது எல்லாம்....
ஒரு நீள் யாத்திரையின்
நீல இரவுகளை கதைகளால்
கட்டி வைத்திருக்கும் கதைசொல்லிகள்
மெல்ல உலவ ஆரம்பிக்கின்றனர்
என் படுக்கையறையின்
சிதறிய நித்திரையில் ....
- நாகா

No comments:

neelam enbathu song