Tuesday, September 4, 2018

15-05-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 60 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
15-05-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 60
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
பேறுகால வலியின்
உச்சத்தில் இருந்தது அந்த பூனை
தோட்டத்தில்
மஞ்சள் கனகாம்பர செடிக்கு பக்கத்தில்
அம்மாவின் அரக்குக்கலர் பூப்போட்ட
புடவைமேல் படுத்திருந்தது அது...
யார் வீட்டு பூனையாக இருக்கும்
விசாரணையை முன்வைத்தும்
விடைதெரியாமல் விழித்தது வீடு...
அதன்பிறகு பாரதியார் கவிதை புத்தகம்
எங்கள் மனப்பாட செய்யுள் ஆனது ..
சாம்பல் நிறத்திலொரு குட்டி
கருஞ்சாந்து நிறத்திலொரு குட்டி
எல்லா குட்டிகளும் "மியாவ் " என்றே சொன்னது...
அப்பத்தா சூ என்பாள் ...
அம்மாவோ முடிஉதிருது என்பாள்
அப்பா தன் பங்குக்கு புளு கிராஸ்ல
கொடுத்துடலாமா என்பார்...
ரேஷன் கார்டில் மட்டும் தான்
பெயர் சேர்க்கவில்லை ...
கால்களை சுற்றிக்கொண்டு
வளைய வந்தது அது வாஞ்சையுடன் ...
சிலர் கேட்டு வாங்கினர்...
சிலருக்கு அன்பளிப்பாக கொடுத்தோம் ...
குட்டிகளை தொலைத்த ஒரு மத்தியான நேரம்
அதே மஞ்சள் கனகாம்பர செடிகருகில்
இப்போது அப்பாவின் வேட்டியில்
மஞ்சள் வெயில் நினைத்திருந்த அந்த நேரம்
விழிப்பை தொலைத்திருந்தது பூனை..
" மியாவ் " சத்தத்தில் பூக்கலாம்
மஞ்சள் பூக்கள் எங்கள் தோட்டத்தில்
மதில் மீது பூனையாக இப்போது நாங்கள்...
- நாகா

No comments:

neelam enbathu song