Tuesday, September 4, 2018

13-04-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 37 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
13-04-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 37
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்பாவின் நான்கு முழ வேட்டி
காப்பி வடிகட்டவும்
இட்லி சுட்டெடுக்கவும்
விளக்குக்கு திரிப்போடவும்
அடிக்கடி மாறிப்போகும் அதிசயம் ரசிப்பதுண்டு ...
அம்மாவின் ரவிக்கை
பிடித்துணியாகும் தருணங்கள்
அவசியமானதாக இருக்கும் ...
அடுப்பில் இருந்து இறக்கி வைக்க
யாதுமாகும் ஒன்றாய் அது மாறிப்போகும்
துளிக்கனவுகள் விழிப்பதுண்டு எனக்குள் .....
பழைய துணிகள்
தலையணைக்குள் நுழைந்து கொள்ளும்
தூக்கத்தை தவணைமுறையில்
பட்டுவாடா செய்யும் அதன் இருப்பு ..
கைக்குட்டையில் இருந்து
சின்னதாய் போன கால்சட்டைவரை
அனைத்திலும் திட்டுத்திட்டாய்
ஒளிந்துகொண்டிருக்கும் என் பால்ய நினைவுகளை
உதறி மடித்து வைக்கும் அவசரம்
உறங்கத்தொடங்கும் படுக்கை
அலச தொடங்குகிறது முதன் முறையாக
கவனமாய் தொலையவேண்டும் இனி ...
- நாகா

No comments:

neelam enbathu song