RJ Naga
22-03-2017
புதன்
புதன்
ஒற்றையடி பாதை : 19
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று நிறைவாக ஒலித்த கவிதை ....
இருந்ததா சொன்னாங்க ...
தேடித்தான் பாக்குறேன்
சுவடு இருந்ததா தகவல் கூட இல்ல...
ஒத்த துளிதான்
அலையடிக்குது மனசுல ..
உதிர்ந்த மேகம்
கலைந்த மரம்
விதை தொலைத்த நிலம்
தாகம் கண்ணாமூச்சி ஆடுது இப்போ...
விரிசல் விழுந்த பூமி
வயசான அப்பத்தா முக சுருக்கத்தை போல ..
ரேகையா கிளை விரிக்கும்
கோடையின் விரல் பிடித்து
ரெக்கை விரிக்கலாம் எப்பவாச்சும் ...
நதியின் நிழல் மிதித்து
அலற ஆரம்பித்தது மத்தியான வானம் ...
நிறம்மாறி போயிருந்த
தண்ணீரின் கனவு
பாதி தூக்கத்துல காணாம போச்சு ...
ஒரு சொட்டு தாகமும்
ஒரு கவளம் சோகமும்
அடங்காத பசியில் தின்ன ஆரம்பிக்குது உசுர ...
வெப்பத்தை கைகுட்டையாக்கி
முகம் துடைக்க ஆரம்பிக்கறப்பதான்
வியர்க்க தொடங்கிச்சு
புள்ளிவைக்காம முகத்துல எத்தன புள்ளிகள் ...
ஒரு பூ பூக்க ஆரம்பிக்குது
வனத்தை ஞாபகப்படுத்தி
ஒரு துளி விழ ஆரம்பிக்குது
மூழ்க ஆரம்பிக்கலாம் இனி எல்லாமும் ....
தேடித்தான் பாக்குறேன்
சுவடு இருந்ததா தகவல் கூட இல்ல...
ஒத்த துளிதான்
அலையடிக்குது மனசுல ..
உதிர்ந்த மேகம்
கலைந்த மரம்
விதை தொலைத்த நிலம்
தாகம் கண்ணாமூச்சி ஆடுது இப்போ...
விரிசல் விழுந்த பூமி
வயசான அப்பத்தா முக சுருக்கத்தை போல ..
ரேகையா கிளை விரிக்கும்
கோடையின் விரல் பிடித்து
ரெக்கை விரிக்கலாம் எப்பவாச்சும் ...
நதியின் நிழல் மிதித்து
அலற ஆரம்பித்தது மத்தியான வானம் ...
நிறம்மாறி போயிருந்த
தண்ணீரின் கனவு
பாதி தூக்கத்துல காணாம போச்சு ...
ஒரு சொட்டு தாகமும்
ஒரு கவளம் சோகமும்
அடங்காத பசியில் தின்ன ஆரம்பிக்குது உசுர ...
வெப்பத்தை கைகுட்டையாக்கி
முகம் துடைக்க ஆரம்பிக்கறப்பதான்
வியர்க்க தொடங்கிச்சு
புள்ளிவைக்காம முகத்துல எத்தன புள்ளிகள் ...
ஒரு பூ பூக்க ஆரம்பிக்குது
வனத்தை ஞாபகப்படுத்தி
ஒரு துளி விழ ஆரம்பிக்குது
மூழ்க ஆரம்பிக்கலாம் இனி எல்லாமும் ....
- நாகா.
No comments:
Post a Comment