Tuesday, September 4, 2018

04-04-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 30 தமிழ் 89.4 பண்பலை நமது " வானவில் " நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

RJ Naga
04-04-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 30
தமிழ் 89.4 பண்பலை நமது " வானவில் " நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அதுவரைக்கும்
வலிக்கும்னு தெரியாம கிடந்தேன் ...
ரெக்கப்பிச்சி பறக்க விட்ட தட்டான்
தொப்புனு விழுந்ததில்
சத்தம்போட்டு சிரித்தது
முதலில் நான் தான் ...
தீபாவளி சமயங்களில்
என்னதான் அப்பா அதட்டினாலும்
நாயோட வால்ல பட்டாசு கட்டி
நெருப்பு வெச்சிருக்க கூடாது ...
லொள் லொள் குரைப்புல
மயங்கி விழுந்தது அது...
இப்போ நெனச்சாலும்
பாவமா இருக்கு ...
நூல் கட்டி பறந்த தும்பிய
பின்னால் போய் இழுத்து இழுத்து விட்டு
சேட்டைகளின் சிறகுகளை
விரிச்சிருக்க கூடாது ...
பாவம் பறக்க எத்தனித்து
கடைசியில எறும்புகள்
இழுத்து போனதுதான் மிச்சம் ....
தென்னங்குச்சியில் சுருக்கு போட்டு
வேலியோர ஓணானை படக்குனு பிடிச்சு
கூட்டமா சுத்தி நின்னு
எது செய்யக்கூடாதோ அது செஞ்சது ...
எல்லாம் சத்தம் போட்டு செய்தாகிவிட்டது
கூட்டணியாவும் சுயேட்சையாவும் .....
வலியறிதலை முதல் முறையா
பார்த்த பொறவு தான்
கை ரெண்ட பிச்சு எறிஞ்சா மாறி
எட்டிப்பாக்குது வலி ....
கண்ணீர் துளிர்க்காத எதிலும்
வலி இல்லைனு சொல்ல முடியாது இல்ல ...
- நாகா

No comments:

neelam enbathu song