RJ Naga
31-05-2017
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 72
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அடிக்கடி கனவில் வந்துபோகிறது
ஒரு தூண்டில் ஒரு மீன் ...
சில நேரம் மீனாகவும்
எப்போதாவது தூண்டிலாகவும்
மாறி விடுகிறேன் ...
எங்கிருந்தோ கொக்கு ஒன்று
பறந்து வந்து அமர்கிறது ...
தப்பிக்க நினைத்து
கரையேற துடிக்கிறேன் ...
மீன்கள் நிரம்பிய குளம்
நெளிகிறது தூண்டில்களால் ..
கொக்குகளின் உதிர்ந்த இறகுகளில்
உருவாகி கொண்டிருக்கிறது
மிதக்கும் தக்கைகள்...
சிக்கலில்லாமல் சிக்கி கொள்ளும்
அந்த தருணத்தில்
கண்ணாடி தொட்டிக்குள்
நீந்த ஆரம்பிக்கிறேன் சுதந்திரத்துடன் ......
ஒரு தூண்டில் ஒரு மீன் ...
சில நேரம் மீனாகவும்
எப்போதாவது தூண்டிலாகவும்
மாறி விடுகிறேன் ...
எங்கிருந்தோ கொக்கு ஒன்று
பறந்து வந்து அமர்கிறது ...
தப்பிக்க நினைத்து
கரையேற துடிக்கிறேன் ...
மீன்கள் நிரம்பிய குளம்
நெளிகிறது தூண்டில்களால் ..
கொக்குகளின் உதிர்ந்த இறகுகளில்
உருவாகி கொண்டிருக்கிறது
மிதக்கும் தக்கைகள்...
சிக்கலில்லாமல் சிக்கி கொள்ளும்
அந்த தருணத்தில்
கண்ணாடி தொட்டிக்குள்
நீந்த ஆரம்பிக்கிறேன் சுதந்திரத்துடன் ......
- நாகா
No comments:
Post a Comment