Monday, September 3, 2018

05-07-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 93 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
05-07-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 93
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கிருந்தோ ஒரு தம்புரா இசை
என்னை திரும்பி பார்க்க வைத்தது ..
அதன் தந்திகளில் அமர்ந்து போகும்
சிற்றெறும்பாக ஊர்கிறது மனசு ..
வீணைகள் மீட்டும் விரல்களைப்போல
ஆரோகண அவரோகணங்களில்
மூழ்கடித்ததில்லை பெரும்பாலும் ..
சுருதியின் நூல்பிடித்து
நடக்க ஆரம்பிக்கின்றன ராகங்கள்...
இசையின் நதி நனைத்திருந்தது
அமர்ந்த தாழ்வாரமெங்கும் ...
பக்கவாத்தியங்களில் பட்டு தெறித்தது
சாகித்யங்களும் கீர்தனைகளும்..
பட்டுபுடவைகளில் சரியத்தொடங்கியது
மோகனமும் கல்யாணியும் ...
வளைந்த அதன் சமவெளியில்
மிதக்க ஆரம்பித்தது காகித கப்பல்களாக உடல்கள்...
மாயவலையில் சிக்கிக் கொள்ளலாம்
ஒரு வாசிப்பாளனை மொழிபெயர்க்கும் இந்த கவிதை
எந்தஒரு தயாரிப்பும் இல்லாமல் ..
- நாகா

No comments:

neelam enbathu song