Tuesday, September 4, 2018

26-04-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 47 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
26-04-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 47
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வாசல் வரும் நாய்க்குட்டிக்கு
சோறுவைக்கும் அம்மாவும் ...
மழை நேரம் ஜன்னல் ஒதுங்கும்
சிட்டுக்குருவிக்கு கதவு திறக்கும் அப்பாவும்
மட்டன் குழம்பு வாசம் விலக
சாம்பிராணி போடும் அப்பத்தாவும் ..
பவளமல்லி பூக்களும்
மயிலிறகு வைத்த நோட்டுப்புத்தகமுமாக
உள்ளங்கையில் மழை ஏந்தும் நானுமாக
நகர்கிறது எங்களை சுமந்துகொண்டு வீடு ..
வேர்களை வானம் காட்டி
பூக்களை நிலத்திற்குள் மறைக்கும்
எங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்துதான்
ஆரம்பிக்கிறது குயில்களின் கூடுகள்…
தரைநோக்கி பின்னப்படும் அதன்
கிளைகளில் இருந்து உதிரும் நிழல்களை
கூடி பெருக்கி தள்ளுவதே வேலையாக இருக்கிறது தற்போது ..
தந்திகம்பங்களில் சிறகு உலர்த்தும்
மைனாக்களின் மொழி அறிந்திருந்தால்
இணைதேடி தினம் அலையும் அதற்க்கு
காத்திருப்புகளை தொடராதே என்று சொல்லி இருக்கலாம் ... ...
காய்ந்த இறகுகளை எறும்புகள் மொய்ப்பதை
அறிந்திருக்கவில்லை அது ...
பிரிவின் வலியை உணர்த்தும்
பிறிதொன்றின் வலி நிரம்பிய பொழுதை
வலியுடன்தான் கடக்க வேண்டி இருக்கிறது
ஒவ்வொருமுறையும் ..
- நாகா

No comments:

neelam enbathu song