RJ Naga
23-04-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 44
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தூறல் நின்னுபோச்சு சுலக்ஷ்னாபோல
திருதிருனு முழிச்சப்பத்தான்
பாக்கியராஜுக்கு பதிலா ராஜ்கிரண் வந்து நின்னதும்
பக்கத்துவீட்டு பாரிஜாதக்கா பரிச பட்டுப்புடவையை
கடன் வாங்கி கட்டிக்கிட்டதும்
அவசரமா நடந்து அதிசயமா முடிஞ்சிடுச்சு ..
செந்தாமரையா அய்யா மாறி இருந்திருக்கலாம் அப்ப
பஜ்ஜி சொஜ்ஜியும் நரசுஸ் காப்பியுமா
முடிந்து போய் இருக்கும் பெண்பார்க்கும் வைபவம் ...
சரித்திரமாக்கணும்னு எல்லோரும் முடிவு பண்ண
அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்குட்டியாட்டம்
மாறிப்போனதை யாரும் கவனிக்கவே இல்லை ...
கிளியை புடிச்சு கொரங்கு கையில கொடுக்காதடா
அப்பத்தா கிழவிக்கு அய்யாகிட்ட இருந்து நெறைய திட்டு ...
முனியாண்டிவிலாஸ் முட்டை பரோட்டாவும்
அய்யர்கடை கோதுமை அல்வாவும் காராசேவுமா
பாகிரதி தியேட்டர்ல டும் டும் டும் பார்த்ததும்
இன்னும் மனசுல கேட்டுகிட்டே இருக்கு...
பட்டாபட்டி ட்ராயரும் தூக்கி கட்டின வேட்டியும்
பயமுறுத்தும் மீசையும்
ஆலக்கரண்டியஅடுப்பில் போட்டு
கொலுமோர் காய்ச்சி விட்டு பயம் ஒட்டியதும்
வேப்பிலை அடிச்சு துன்னூறு போட்டதும்
இன்னும் ராசாவின் மனசுல மீனா போல
மாம்பிஞ்சு கணக்கா வாசம் வீசிட்டு இருக்கு...
மருண்டு போன மைனா கணக்கா
ரூவாய்க்கு மூணுன்னு கருப்பு வெள்ளையில
சின்னாளபட்டிக்கு சந்தைக்கு போனப்ப
எடுத்துகிட்ட போட்டோவை பார்த்தா
மனசுக்குள்ள மரவட்ட ஒண்ணு ஊர்ந்து போகுது இப்போ...
ஒத்த கோழியை அப்படியே சாப்பிடும்
மனுஷன்கிட்ட இருந்து தான்
சின்ன சின்னமழைச்சாரல்
தாழ்வாரம் எல்லாம் நனைக்க ஆரம்பிச்சது….
முரட்டு பிடிக்குள் பூக்க ஆரம்பிச்சது ரோசா ஒண்ணு ...
கைபுடிச்சு அம்மி மிதித்த போது வந்த பயம்
இப்போ எங்க போச்சுன்னு சுத்தமா தெரியல...
நேசிக்க ஆரம்பிச்சப்பத்தான் கை நழுவி போச்சு
நான் சினேகாவாவும் அவரு சேரனாவும்
மாறிப்போனபோதுதான் பிரிவோம் சந்திப்போம்னு
ரீல் அறுந்து விழாம கெடக்கணுமேன்னுதான்
சிறுக்கி மனசுக்குள்ள சிக்கலொன்னு விழுது ...

- நாகா
No comments:
Post a Comment