Tuesday, September 4, 2018

20-04-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 43 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
20-04-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 43
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
காற்றில் அங்கிட்டும் இங்கிட்டுமா
அசையும் ஊஞ்சலை போலத்தான் நான்
தூண்டிலில் சிக்காத கெளுத்தி மீனாட்டம்
துள்ளி குதிக்கிறேன் குளத்தங்கரையில ...
ரெட்டை ஜடையில் ஒத்த ரிப்பனா
ஒத்த ஜிமிக்கியில ரெட்டை திருகாணியா
காம்பஸ் வச்சு சரியா வட்டம் போட தெரியாத
பல நேரங்களில் வளையல் வெச்சுதான்
வட்டம் போடுறேன் ...
தூக்கி செருகிய பாவாடை சிக்கி
பாண்டி ஆடின கட்டத்துல பொத்துனு விழுந்தது ...
சைக்கிள் மிதிக்கறேன்னு
முட்டி சிராய்ச்சி பசுஞ்சாணி தேய்ச்சது ..
பரங்கி பூ பறிச்சு ரங்கோலி கோலத்தில்
வைக்கமுடியாம சுத்திசுத்தி வந்தது ...
மதில் தாண்டி குதித்த மாமரத்து அணிலை போல
தண்டவாளம் பக்கத்துல
பூத்திருக்கும் மஞ்ச பூவை போல
ஏதோ ஒண்ணு அழுத்தமா பதிஞ்சு போகுது மனசுக்குள்ள...
மணல்வீடுக்குள்ள மினுக்கட்டான் பூச்சி வச்ச மாதிரி
ராத்திரியில மினுக்கவே செய்யுது நெனப்பு ..
நூல் கட்டி பறக்க விடும் காத்தாடி போல
வால் கட்டி திரியுது மண்தின்ன வயசு...
- நாகா

No comments:

neelam enbathu song