Monday, September 3, 2018

24-08-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 127 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
24-08-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 127
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு பார்வையாளனின்
அதீத கவனத்துடன்தான்
அணுகவேண்டியிருக்கிறது எதையும்....
ஒப்பனைகளும் வேடங்களும்
மாறிக்கொண்டிருக்க மாறாத புன்னகையுடன்
ஒரு மேடையின் அவஸ்தையைப்போல
நெளியவேண்டியிருக்கிறது ஒவ்வொருமுறையும் ...
திருப்திப்படுத்தவேண்டிய கடமையை
சரிவர செய்யாத அறிமுக கலைஞனாக
மாறிப்போன சங்கடத்தில்
கைகுலுக்கும் பார்வையாளனின்
பார்வை தவிர்ப்பை நிராயுதபாணியாய்
எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது..
முகமூடிகளில் ஒளிந்துகொண்டு
புன்னகை செய்யும் உதடுகளின் சுவடுகள்
தென்படுவதேயில்லை ஒருபோதும் ...
முள் கீறிய விரல் ரணங்களில்
பூக்க ஆரம்பிக்கிறது பூக்கள் ...
பூங்கொத்துக்காக பறிக்க வேண்டியிருக்கிறது
பார்வையாளனாக பூக்களை ....
- நாகா

No comments:

neelam enbathu song