Tuesday, September 4, 2018

19-06-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 83 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
19-06-2017
திங்கள்

ஒற்றையடிப்பாதை : 83
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அட்டைக்கத்தியில் சண்டையும்
மைத்தீட்டிய மீசையில் வீரமும்
காற்றை செதுக்கும் குரலிலும்
வேடம் புனைந்ததெல்லாம் ஒரு காலம் ...
இருட்டில் எங்கோ விழுந்திருந்த
சலங்கையின் ஒற்றைமணியில்
ஒலிக்க ஆரம்பித்தது கூத்து பாட்டு ஒன்று ...
உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்
பெட்ரோமாக்ஸ் லைட்டின் வெளிச்சம்
சில்லுகளாய் கண் கூச வைத்திருக்கும் ...
கட்டியக்காரனின் அக்கறையை போல
அடிக்கடி குட்டிக்கரணம் அடிக்கிறது கனவு ...
புனைந்த வேடத்தின் அடாவடித்தனம்
பகலிலும் தொடர்கிறது நிதானமாக...
சரியாய் எல்லாம் நிகழ்த்திய திருப்தியில்
படுத்துறங்கும் ஆர்மோனியத்தின்
கருப்பு வெள்ளைக்கட்டைகளில்
அமர்ந்து போகும் பட்டாம்பூச்சியை போல
கடந்து தான் போகிறது
நேற்றுவரை அடவு கட்டிய காற்று ...
- நாகா

No comments:

neelam enbathu song