Monday, September 3, 2018

16-07-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 99 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
16-07-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 99
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு ஓவியத்தின்
அடங்காதா வண்ணமாக
திமிரிய தூரிகையாக தெரிந்தான் அவன் ...
நிறக்குழப்பத்தில் அவன் எண்ணங்களை
ஓவியங்களாக தீட்டி கொண்டிருந்தாள் அவள்...
இரவில் பொங்கி வழிந்த
வெளிச்ச இருட்டில் இசையில் மிதந்தது அந்த அறை...
அடைபட்ட பறவைகளை
பறக்க அழைத்தது அவளின் வானம்...
அவனின் கிளைகளில் தொங்கிய வனத்திற்குள்
கூடுகட்ட தொடங்கிய அவள் வளர்த்த கிளிகள்
சிறகு விரிக்க ஆரம்பித்தது மெதுவாக ....
பார்வைகளின் தூரம் தீர்மானித்தது
அவர்களின் ஓவியங்களை ...
அவனை நனைத்த மழை ஓவியம்
அவளின் குடைகளை தேட ஆயத்தமானது ...
ஒரு மெழுகுவர்த்தியின் இரவை போல
இயல்பாய் விடிந்தது அவர்களின் காதல்...
வண்ணக்கலவையில் தனித்து தெரிந்த
நிறத்தின் நிழலில் ஒளிந்துகொண்டிருந்தது
யாரும் கவனிக்காத ஓவியனின் கவிதை ....
- நாகா

No comments:

neelam enbathu song