Tuesday, September 4, 2018

25-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 21 தமிழ் 89.4 பண்பலை வானவில்லில் இன்று ஒலித்த நிகழ்ச்சி இறுதி கவிதை ...


RJ Naga
25-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 21
தமிழ் 89.4 பண்பலை வானவில்லில் இன்று ஒலித்த நிகழ்ச்சி இறுதி கவிதை ...
கொடுக்காப்புளி மரத்துக்கு கீழ
அணிலொன்னு குதிச்சு போச்சு
வேப்பமர நிழலுக்கடியில்
எறும்பு ஒண்ணு ஊர்ந்து போச்சு ...
பள்ளிக்கூட ஜன்னல் வழியா
வழிதவறி தட்டான் போச்சு ..
கோவில் மணி ஓசை கேட்டு
புறா கூட்டம் பறந்து போச்சு ...
ஊமத்தம் பூவுக்குள்ள
லேசா தேன்துளிற்கும் ...
அரளிப்பூ வாசத்தில
அடுக்களை தான் மணக்கும் ....
இட்டிலி அவித்தெடுத்த
துணிபோல மனசிருக்கு
தோசை திருப்பியாட்டம்
அவன் நெனப்பு தீய்ந்திருக்கு ...
தேங்காய் சிரட்டையாட்டம்
வக்கணையா காத்திருக்கு
பனம்பழம்போல் வேகவச்சு
பொழுதன்னைக்கும் விழிச்சிருக்கு ....
ராத்திரி பகலெல்லாம்
சோழியா சுழல வைக்கும் ...
சிம்னி விளக்காட்டம்
தாயம் விழ வைக்கும்...
என்னையே அகலாக
அடிக்கடி மாத்திக்கறேன்
திரிய கொளுத்தாமா
தீபமா ஆக்கிக்கிறேன்…
- நாகா

No comments:

neelam enbathu song