RJ Naga
10-04-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 35
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
காத்து அசைக்கும் ஒத்த மரக்கதவு
இங்கிட்டும் அங்கிட்டுமா
என்ன போல கவிதை எழுதும் ...
வாசிக்கத்தான் ஆளில்லாம இப்போ...
கருவேல மரத்துல
சுப்பிரமணி ஆசாரி செஞ்சு கொடுத்ததா
அப்பா சொல்ல கேட்டிருக்கேன்
அதெல்லாம் ஒருகாலம் ...
நாதாங்கி போடாத
தொறந்த வீட்டுக்குள்ள
எப்போவாச்சும் எட்டிப்பார்க்கும்
கொஞ்சம் வெயிலும் கொஞ்சம் மழையும்
அப்பாவோட விருந்தாளிகளை போல ...
அப்பத்தா அடிக்கடி சொல்வா
கதவை ஆட்டாத
ஆத்தாளுக்கு தலைவலிக்கும்
வலிநிவாரணிய இதுவரைக்கும்
கண்டுபிடிக்கல வீடு......
நிலைப்படி இடிச்சுதான்
ஒவ்வொருமுறையும்
வேலாயுதம் பெரியப்பா உள்ள வருவார்...
இலக்கம் சுமக்கும் கதவு
பல நேரம் என்னையும் சுமந்திருக்கு
தலையை தேய்ச்சுகிட்டு தான்
அடுத்த ஆட்டத்தையே ஆரம்பிப்போம் நாங்க...
கத்திரி வெயில் எங்களை தின்ன ஆரம்பிக்கும் ...
கதவு திறந்த ராத்திரி
பொழுக்கத்தோட புழுக்கமா
போர்வைக்குள்ள புகுந்துகிடும் ...
இன்னைக்கு அடுக்குமாடி குடியிருப்பில்
குடியிருந்தாலும்
எந்த கதவிலும் கேட்க முடிந்ததில்லை
இதயம் துடிக்கும் ஓசையை...
அன்னைக்கு கதவுகள்
கதவுகளாக இருந்ததில்லை ......
இங்கிட்டும் அங்கிட்டுமா
என்ன போல கவிதை எழுதும் ...
வாசிக்கத்தான் ஆளில்லாம இப்போ...
கருவேல மரத்துல
சுப்பிரமணி ஆசாரி செஞ்சு கொடுத்ததா
அப்பா சொல்ல கேட்டிருக்கேன்
அதெல்லாம் ஒருகாலம் ...
நாதாங்கி போடாத
தொறந்த வீட்டுக்குள்ள
எப்போவாச்சும் எட்டிப்பார்க்கும்
கொஞ்சம் வெயிலும் கொஞ்சம் மழையும்
அப்பாவோட விருந்தாளிகளை போல ...
அப்பத்தா அடிக்கடி சொல்வா
கதவை ஆட்டாத
ஆத்தாளுக்கு தலைவலிக்கும்
வலிநிவாரணிய இதுவரைக்கும்
கண்டுபிடிக்கல வீடு......
நிலைப்படி இடிச்சுதான்
ஒவ்வொருமுறையும்
வேலாயுதம் பெரியப்பா உள்ள வருவார்...
இலக்கம் சுமக்கும் கதவு
பல நேரம் என்னையும் சுமந்திருக்கு
தலையை தேய்ச்சுகிட்டு தான்
அடுத்த ஆட்டத்தையே ஆரம்பிப்போம் நாங்க...
கத்திரி வெயில் எங்களை தின்ன ஆரம்பிக்கும் ...
கதவு திறந்த ராத்திரி
பொழுக்கத்தோட புழுக்கமா
போர்வைக்குள்ள புகுந்துகிடும் ...
இன்னைக்கு அடுக்குமாடி குடியிருப்பில்
குடியிருந்தாலும்
எந்த கதவிலும் கேட்க முடிந்ததில்லை
இதயம் துடிக்கும் ஓசையை...
அன்னைக்கு கதவுகள்
கதவுகளாக இருந்ததில்லை ......
- நாகா
No comments:
Post a Comment