Tuesday, September 4, 2018

09-03-2017 வியாழன் ஒற்றையடி பாதை : 8 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியின் நிறைவில் கொடுத்த கவிதை ..........



RJ Naga
09-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதை : 8
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியின் நிறைவில் கொடுத்த கவிதை ..........
கொல்லப்புரத்துல
என்ன போல நெடுநெடுனு
வளர்ந்திருந்தது முருங்கை மரம் .. ..
சட சடையா காய்க்கும் காயும்
கொத்து கொத்தா பூத்த முருங்கைப்பூவும்
இன்னும் நிழலா செதறிகெடக்கு
பாழாப்போன மனசுக்குள்ள...
ஜன்னலுக்கு வெளிய
பாக்கறப்பல்லாம் குதித்து ஓடும் ஒரு அணில்
முருங்க பிசினில உட்கார்ந்து போற
ஒரு பட்டாம்பூச்சி
நாலஞ்சு கம்பளிப்பூச்சிகளோட
மடிச்சு வெச்ச நாற்பத்தெட்டாம் பக்க
ஜெயகாந்தன் நாவலாட்டம்
மந்தகாசமா சிரிக்கும் ..
ஊருல இருக்கும் சித்தப்பா
அப்பத்தா வீட்டுக்கு எதிரில் இருக்கும்
தொரைக்கண்ணு மாமா
எங்க வீட்டு முருங்கைக்காய்-ன்னா
அவ்வளவு பிரியம் ...
நாலு இணுக்கு கீரை
கொஞ்சம் பருப்பு போட்டு கடைஞ்சா
ரெண்டு கவளம் தூக்கலா சாப்பிடலாம் ...
மாமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடினாலும்
அதென்னவோ முருங்க மரத்து மேல
அம்புட்டு பாசம்...
பர்ஸ்ட் மார்க் எடுத்தப்பவும்
பெரிய மனுஷி ஆனப்பவும்
முருங்க மரத்த கட்டிகினு நின்னது
இன்னும் லாந்தர் விளக்காட்டம் ஞாபகத்துல இருக்கு ...
கல்யாணம் குழந்தைனு
வேர் பிடுங்கி நட்டாச்சு என்னை ..
நட்டுவச்சா தழைக்கிற முருங்கையாட்டம்
வளர ஆரம்பிச்சாச்சு..
வீட்டுக்கு வரும் கடுதாசி நின்னுபோனமாதிரி
புயல் அடிச்சு விழுந்துபோனதா அம்மா சொன்னா ..
பூனை இறந்ததுக்கே
ஒருவாரம் சாப்பிடல மாமனார் வீட்டுல...
வீட்டுக்காரருக்கு கொழம்பு வைக்கணும்
நான் கீரையை ஆய ஆரம்பிக்கிறேன்
மரத்தில் இருந்து தாவி ஓடுகிறது ஒரு அணில்
அதே போல இன்னொரு முருங்கை மரத்துல .....
- நாகா

No comments:

neelam enbathu song