RJ Naga
06-04-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 32
தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கத்தரி செடி போட்டு
காத்திருந்த நேரத்துல
முந்திரி வாசம்வந்து
வக்கணையா வம்பளக்கும் ..
காத்திருந்த நேரத்துல
முந்திரி வாசம்வந்து
வக்கணையா வம்பளக்கும் ..
பட்டுரோசா காம்பவுண்டுல
ஆடு ஒண்ணு மேஞ்சுபோக
தோட்டத்து செடியில்
டிசம்பர் பூ கண்சிமிட்டும்...
ஆடு ஒண்ணு மேஞ்சுபோக
தோட்டத்து செடியில்
டிசம்பர் பூ கண்சிமிட்டும்...
ஒத்த சுவருக்குள்ள ஒளிஞ்சிருக்கு நம்ம கத
வெடிச்ச நெலத்துக்குள்ள விழுந்திருக்கு ஒத்த விதை .......
வெடிச்ச நெலத்துக்குள்ள விழுந்திருக்கு ஒத்த விதை .......
தொழுவத்தில் கட்டிவச்ச
வைக்கோல் கன்னுகுட்டி
சீம்பால் திரட்டிக்கூட
தித்திக்காம உப்பு கரிக்கும் ...
வைக்கோல் கன்னுகுட்டி
சீம்பால் திரட்டிக்கூட
தித்திக்காம உப்பு கரிக்கும் ...
தொட்டியில போட்டுவச்ச
குட்டிக்குட்டி மீனெல்லாம்
அக்கறையாய் நீந்திப்போக
அடிமனசில் அலையடிக்கும் ...
குட்டிக்குட்டி மீனெல்லாம்
அக்கறையாய் நீந்திப்போக
அடிமனசில் அலையடிக்கும் ...
வலிக்குதுன்னு சொன்னதில்லை மூங்கில் தொட்ட பூங்காத்து...
சோகம் வந்து சேர்ந்ததில்லை முள் கீறி வந்த பழம்பாட்டு ..
சோகம் வந்து சேர்ந்ததில்லை முள் கீறி வந்த பழம்பாட்டு ..
அரிவாள்மனைக்குள்ள
குடித்தனமே நடத்திப்புடும்
கூரையேறி வானம் பார்க்கும்
பூசணிப்பூ தேன்துளிற்கும் ...
குடித்தனமே நடத்திப்புடும்
கூரையேறி வானம் பார்க்கும்
பூசணிப்பூ தேன்துளிற்கும் ...
மூக்கணாங்கயிறுகளை
எரவானம் ஒளிச்சு வைக்க
ஈசானி மூலையில
பல்லி ஒண்ணு இரை பிடிக்கும் ....
எரவானம் ஒளிச்சு வைக்க
ஈசானி மூலையில
பல்லி ஒண்ணு இரை பிடிக்கும் ....
வாசல் கோலத்துல வீட்டோட நிழல் இருக்கும்
ஜன்னல் தாண்டி போய் சூரியனோ கதை படிக்கும் ...
ஜன்னல் தாண்டி போய் சூரியனோ கதை படிக்கும் ...
பரண் எல்லாம் கெடக்குது
கிழிஞ்சுபோன பஞ்சாங்கம்
தூணெல்லாம் துளிர்த்திருக்கும்
வெக்கையோட வெறும்தாகம்
கிழிஞ்சுபோன பஞ்சாங்கம்
தூணெல்லாம் துளிர்த்திருக்கும்
வெக்கையோட வெறும்தாகம்
அடுப்பங்கரையெல்லாம்
சிந்தி கெடக்குது
வீட்டு பசியோட
புன்னகை பருக்கைகள்...
சிந்தி கெடக்குது
வீட்டு பசியோட
புன்னகை பருக்கைகள்...
நீலம் தடவி வெச்ச வானம் போலில்லை
நெருப்பு சூடி நிக்கும் உதயம் பூக்கவில்லை ...
நெருப்பு சூடி நிக்கும் உதயம் பூக்கவில்லை ...
- நாகா
No comments:
Post a Comment