Tuesday, September 4, 2018

21-06-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 85 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
21-06-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 85
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
மாந்தோப்பை கடந்துதான்
பள்ளிக்கூடம் போவோம் ...
தோட்டக்காரனுக்கு தெரியாமல்
பறித்த மாங்காய் புளிக்கவே செய்தது...
இருந்தும் கல்லெறியவே செய்தோம்
ஒவ்வொருமுறையும் ..
நட்டுவைத்த மாங்கொட்டையில்
எட்டிப்பார்க்கும் துளிரில் தென்படுகிறது
இனிப்பும் புளிப்பும் கலந்த நினைவு ..
இளவேனில் காலத்தில் அப்பா
நிறைய மாம்பழங்களுடன் வருவார்....
தோட்டம் முழுதும் மாமரங்களாக நிற்க
கனவு வனத்தில் தொலைந்துபோவேன் நான் ...
அக்காவின் மசக்கை மாங்காக்களை
தேடவைத்தபோதுதான் வீட்டில் ஒரு
மாமரம் இருந்திருக்கலாமோ என்று நினைத்ததுண்டு ...
உதிர்ந்த மாம்பிஞ்சுகளில்
அம்மா செய்த மாவடு ஊறுகாய்
என் தயிர் சாத நினைவை புளிக்கவைத்தது ..
மாந்தோப்புகளும் எப்போதாவது
பாட்டிசைத்து செல்லும் குயிலுமாக
ஒரு கோடை எனக்குள் நிழல் தூவி செல்லும் ...
நேற்றைக்கு நேற்று மாங்கொட்டைக்குள்
வண்டொன்றை பார்த்தேன் ...
விட்டு விடுதலையாகாத அதன் இருப்பு
முளைக்க ஆரம்பித்தது இப்போது எனக்குள் ...
மாமரத்தின் நிழலில்
படுத்துறங்குகிறது என் பால்யம்
- நாகா

No comments:

neelam enbathu song