Tuesday, September 4, 2018

08 -06-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 77 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
08 -06-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 77
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு வழிப்போக்கனின்
பாதை மறந்த பயணம்
நடுவழியில் தடுமாறி நிற்பதை போல ....
அந்த மாமரத்தின் கிளையில்
உதிர்த்து வந்திருக்கும்
குயிலில் குரலில் நனைந்த
துண்டு இசையை போல ...
ஏதோ மழலையின் கரங்கள்
உருவாக்கிய காகித கப்பல்
குப்புற கவிழ்ந்து கிடப்பதை போல ...
எருக்கஞ்செடிக்கு பக்கத்தில்
தனிமை விதைக்கும்
ஒற்றை கால் செருப்பை போல...
ஓடும் பேருந்தில் ஜன்னல் கம்பியில்
தொட்டு படர்ந்த யாரோ
ஒரு பெண்ணின் கலைந்த கூந்தலை போல...
மிக அருகாமையில் இருக்கும் இடத்தை
டேக் டைவர்ஷன்களில்
சுற்றி கடப்பதை போல...
தமிழ் தெரிந்தும் பிற மொழியில்
சிரித்து கதைத்து நகர்வதை போல...
எல்லாம் இயல்பாக இருப்பதாய்
காட்டிக்கொள்கிறது
இயல்பை மீறிய தருணங்களில் ....
- நாகா

No comments:

neelam enbathu song