RJ Naga
29-03-2017
புதன்
புதன்
ஒற்றையடி பாதை : 25
தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
மின்சார கம்பம் ஒண்ணு
நட்டு வச்சாங்க வீட்டுப்பக்கம் ...
மொட்டைமாடி போய்
தொட்டுப்பார்க்கும் உசரத்துல
கம்பியொன்னு தலை தட்டும் ...
அப்பப்ப வந்து போன
மாமரத்து குயிலோன்னும்
வெப்பமரத்து மைனா ஒண்ணும்
எப் எம் ரேடியோவா கச்சேரி நடத்தும் ...
மார்கழி மாசத்து
சிறகு உலர்த்தும் அதோட ஈராயிச
உசுருக்குள் தீமூட்டி போகும் ...
லாந்தர் விளக்காட்டம்
ஒரு குண்டு பல்ப் எரியும் வீட்டுல
அதோட சிக்கி முக்கி குரலில்
நனைந்து மூழ்கி தத்தளிப்போம் நானும் தம்பியும் ...
மாசத்துல மூணு முறைதான் அப்பா வருவார்
ஊர் சுத்தும் வேலை அவருக்கு
எங்களை மேய்க்கற வேலை அம்மாவுக்கு ...
வழிதெரியாம உள்நுழையும்
தட்டான்களை கணக்கெடுக்கறதும்
மொட்டைமாடி வத்தலை
களவாடும் நினைப்பில்
கம்பியில் உட்காரும் காக்காவை விரட்டறதுமா
எங்க பொழப்பும் நல்லாத்தான் போச்சு ...
மின்சாரக்கம்பியில் உட்கார்ந்தது காக்கா
ரக்கைய விரிக்கறதுக்குள்ள
சட்டுனு முடிஞ்சுபோச்சு எல்லாம் ...
மொட்டைமாடியில் பொத்துனு விழுந்தது ...
அன்னைக்கு மட்டும் மைனாவும் குயிலும்
ஏன் பாடவரலைனு புரியல எனக்கு ...
அதுக்கப்புறம் வெறுமையா இருந்த
மின்சார கம்பியில் ரொம்ப நாளா
காத்தாடி ஒண்ணு தொங்கிட்டே கெடந்தது ....
இப்போல்லாம் அப்பா
வீட்டுலதான் கெடக்காரு
ஊர் சுற்றும் வேலைய விட்டு ரொம்ப நாளாச்சு ....
நட்டு வச்சாங்க வீட்டுப்பக்கம் ...
மொட்டைமாடி போய்
தொட்டுப்பார்க்கும் உசரத்துல
கம்பியொன்னு தலை தட்டும் ...
அப்பப்ப வந்து போன
மாமரத்து குயிலோன்னும்
வெப்பமரத்து மைனா ஒண்ணும்
எப் எம் ரேடியோவா கச்சேரி நடத்தும் ...
மார்கழி மாசத்து
சிறகு உலர்த்தும் அதோட ஈராயிச
உசுருக்குள் தீமூட்டி போகும் ...
லாந்தர் விளக்காட்டம்
ஒரு குண்டு பல்ப் எரியும் வீட்டுல
அதோட சிக்கி முக்கி குரலில்
நனைந்து மூழ்கி தத்தளிப்போம் நானும் தம்பியும் ...
மாசத்துல மூணு முறைதான் அப்பா வருவார்
ஊர் சுத்தும் வேலை அவருக்கு
எங்களை மேய்க்கற வேலை அம்மாவுக்கு ...
வழிதெரியாம உள்நுழையும்
தட்டான்களை கணக்கெடுக்கறதும்
மொட்டைமாடி வத்தலை
களவாடும் நினைப்பில்
கம்பியில் உட்காரும் காக்காவை விரட்டறதுமா
எங்க பொழப்பும் நல்லாத்தான் போச்சு ...
மின்சாரக்கம்பியில் உட்கார்ந்தது காக்கா
ரக்கைய விரிக்கறதுக்குள்ள
சட்டுனு முடிஞ்சுபோச்சு எல்லாம் ...
மொட்டைமாடியில் பொத்துனு விழுந்தது ...
அன்னைக்கு மட்டும் மைனாவும் குயிலும்
ஏன் பாடவரலைனு புரியல எனக்கு ...
அதுக்கப்புறம் வெறுமையா இருந்த
மின்சார கம்பியில் ரொம்ப நாளா
காத்தாடி ஒண்ணு தொங்கிட்டே கெடந்தது ....
இப்போல்லாம் அப்பா
வீட்டுலதான் கெடக்காரு
ஊர் சுற்றும் வேலைய விட்டு ரொம்ப நாளாச்சு ....
- நாகா
No comments:
Post a Comment