Tuesday, September 4, 2018

30-04-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 49 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
30-04-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 49
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வருத்தங்களை முன் வைக்கும் வார்த்தைகளுக்கு
சொந்தக்காரனாகி போகிறான் அவன்
வலிகள் இடுப்பில் சுமக்கும் தண்ணீர் குடம் போல்
தளும்ப ஆரம்பிக்கறது ஒவ்வொருமுறையும் ...
நாசித் தொடும் வேப்பம் பூ வாசம்
கசப்பை தந்ததில்லை இதுவரை ..
நூல் பிடிக்கும் வால்காற்றாடியும்
சாட்டை பிணைக்கும் பம்பரமுமாக
கச்சிதமாய் இழைத்து போகிறது நினைவு ...
நீரில் வரைந்து போகும் வட்டங்களில்
மூழ்கிப்போன கல்லில் யாரோ எறிந்த கைரேகை
மேலெழும்பி மிதக்கிறது என்னை போல ...
ஒரு சுள்ளானை போல காதுசுற்றும்
அந்த ரீங்காரம் எழுதி செல்கிறது அவன் ஞாபகத்தை ...
வனமேவும் வனப்பேச்சிகளால்
நிரம்பி வழியும் என் தனிமை நந்தவனத்தில்
பூவில்லாத செடியில் அமர்ந்து போகும்
வண்ணத்துபூச்சி ஆகிறான் அவன் ..
கட்டைவிரலை தட்சணையாக தரச்சொல்லி
கட்டாயப்படுத்தாத துரோணாச்சாரியார்களையே
சந்திக்கிறேன் அடிக்கடி ...
வித்தைகளின் விலா எலும்புகளில்
துளிர்க்க ஆரம்பிக்கறது ரணங்களின் வியர்வை ...
தொட்டு பிடிக்க எத்தனிக்கையில்
விட்டு பறக்குது யாவும் ...
- நாகா

No comments:

neelam enbathu song