RJ Naga
26-03-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடி பாதை: 22
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த நிறைவு கவிதை ...
எங்க வீட்டுல ஒரு பூனை இருந்தது
அது பூனை தானான்னு
சந்தேகம் எனக்கு ...
பால் குடிக்காது பாத்திரம் உருட்டாது
மதில் மேல தாவாது ...
இருந்தும் "மியாவ்" சத்தத்துல
அடியாளப்படுத்திட்டே இருந்தது..
அதுக்கு ரொம்ப பிடிவாதம்
புலிதான் அதுன்னு
எவ்வளவோ சொல்லி பார்த்தும்
நம்ப மறுத்ததில் ஒரு சின்ன ஆறுதல் ...
என்னோட எல்லா இடத்திலேயும்
என் உத்தரவு இல்லாமல்
புழங்க ஆரம்பித்ததில்
என்னைவிட மத்தவங்களுக்குத்தான் அதிருப்தி ..
கண்மூடிக்கொண்டு
எல்லாம் இருட்டாகி போனதா
கதைவிட்டதில்ல அது ...
யான முடியில் மோதிரம் போட்ட
விரல்களில் இனிமே
பூனைமுடி மோதிரம் போட்டா என்ன ...
சிறு வெயிலாக கதவு திறந்து உள் நுழையும்
அதன் இருப்பில் ஒளிய ஆரம்பித்தது
எலிகளின் பயம் ...
ஒரு மழைக்கால மத்தியானம்
செத்துப்போச்சு எங்க பூனை ..
தோட்டத்துல புதைத்து வச்சோம் ...
அங்க தான் செம்பருத்தி பூக்க ஆரம்பித்தது
வெள்ளை நிறத்துல வாசல் வந்த பூனைதான்
செவப்பு நேரத்துல சிரிக்க ஆரம்பிச்சது ...
இனி பூனையை பார்க்க நான் தான் போகணும் ...
அது பூனை தானான்னு
சந்தேகம் எனக்கு ...
பால் குடிக்காது பாத்திரம் உருட்டாது
மதில் மேல தாவாது ...
இருந்தும் "மியாவ்" சத்தத்துல
அடியாளப்படுத்திட்டே இருந்தது..
அதுக்கு ரொம்ப பிடிவாதம்
புலிதான் அதுன்னு
எவ்வளவோ சொல்லி பார்த்தும்
நம்ப மறுத்ததில் ஒரு சின்ன ஆறுதல் ...
என்னோட எல்லா இடத்திலேயும்
என் உத்தரவு இல்லாமல்
புழங்க ஆரம்பித்ததில்
என்னைவிட மத்தவங்களுக்குத்தான் அதிருப்தி ..
கண்மூடிக்கொண்டு
எல்லாம் இருட்டாகி போனதா
கதைவிட்டதில்ல அது ...
யான முடியில் மோதிரம் போட்ட
விரல்களில் இனிமே
பூனைமுடி மோதிரம் போட்டா என்ன ...
சிறு வெயிலாக கதவு திறந்து உள் நுழையும்
அதன் இருப்பில் ஒளிய ஆரம்பித்தது
எலிகளின் பயம் ...
ஒரு மழைக்கால மத்தியானம்
செத்துப்போச்சு எங்க பூனை ..
தோட்டத்துல புதைத்து வச்சோம் ...
அங்க தான் செம்பருத்தி பூக்க ஆரம்பித்தது
வெள்ளை நிறத்துல வாசல் வந்த பூனைதான்
செவப்பு நேரத்துல சிரிக்க ஆரம்பிச்சது ...
இனி பூனையை பார்க்க நான் தான் போகணும் ...
- நாகா
No comments:
Post a Comment