RJ Naga
02-05-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 51
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
இயற்கை அந்த வனாந்திரம் முழுக்க
வரைய ஆரம்பித்தது
மலைகளை நதிகளில் கூழாங்கல்லாக்கிய
கர்வத்தில் சலசலக்கும் நீரில்
ஒற்றை இலையென
மிதக்க ஆரம்பித்தது அந்த வனம் ..
முகம் நனைத்து போன மேகம்
தலைதுவட்டி போனது உயர்ந்த மரங்களின் கிளைகளில் ...
ஒரு அழுகுணி ஆட்டத்தில்
தோற்றவளின் விசும்பலை போல
மூச்சிரைத்து நின்றது அந்த ஒற்றையடி பாதை...
சமவெளிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு போத்தலில் மொண்டு எடுத்த ஆற்றின் அமைதி
பறவையின் சிறகில் ஆவியாகிக் கொண்டிருந்தது ...
வெட்டுப்படும் மரங்களின் சத்தத்தில்
உதறி விழிக்கும் கானகம் எங்கும் பச்சை ரத்தம் ..
காட்டுப்பூக்களின் வாசத்தில்
பயணம் தொடரும் வழிப்போக்கனாக
மாறிவிடுகேன் வனம் நுழைகிறபோதெல்லாம் ....

- நாகா
No comments:
Post a Comment