RJ Naga
06-07-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 94
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்பாவிற்கு நிறைய தோழிகள்
தோழிகளால் நிரம்பியது அவர் வாழ்க்கை ..
" பொம்மனாட்டிகளால வளர்ந்தவண்டா நான் "
சொல்லும்போதே ஒரு கம்பீரம்
நளினமாய் வந்து செல்லும் அவரிடம் ..
செல்ல பெயர்களால் அவரை அழைக்கும்
எல்லா தோழிகளையும்
அத்தை என்றே அழைத்திருக்கிறேன் நான்....
ஏதோ ஒரு இடத்தில் அப்பாவின் காதல்
கரைக்கடக்காத தருணங்களில்
அம்மாவின் கப்பல் குப்புற கவிழும் ...
அம்மாவின் தோழர்களை பற்றி
அப்பா ஆர்வம் காட்டியதில்லை ஒருபோதும் ..
கூச்சப்பட்டதாக தெரியவில்லை
கடன்கேட்பதிலும்
அடையாளப்படுத்திக் கொண்டதிலும்.....
நேற்றைக்கும் நேற்று
அப்பாவின் தோழி ஒருவரை
சந்திக்க நேர்ந்தது ....
" அதெப்படி அப்பாவிற்கு மட்டும்
இத்தனை தோழிகள் ..."
மீசை முளைக்க ஆரம்பித்த பொழுதில்
கேட்ட கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை ...
தோழிகளால் நிரம்பியது அவர் வாழ்க்கை ..
" பொம்மனாட்டிகளால வளர்ந்தவண்டா நான் "
சொல்லும்போதே ஒரு கம்பீரம்
நளினமாய் வந்து செல்லும் அவரிடம் ..
செல்ல பெயர்களால் அவரை அழைக்கும்
எல்லா தோழிகளையும்
அத்தை என்றே அழைத்திருக்கிறேன் நான்....
ஏதோ ஒரு இடத்தில் அப்பாவின் காதல்
கரைக்கடக்காத தருணங்களில்
அம்மாவின் கப்பல் குப்புற கவிழும் ...
அம்மாவின் தோழர்களை பற்றி
அப்பா ஆர்வம் காட்டியதில்லை ஒருபோதும் ..
கூச்சப்பட்டதாக தெரியவில்லை
கடன்கேட்பதிலும்
அடையாளப்படுத்திக் கொண்டதிலும்.....
நேற்றைக்கும் நேற்று
அப்பாவின் தோழி ஒருவரை
சந்திக்க நேர்ந்தது ....
" அதெப்படி அப்பாவிற்கு மட்டும்
இத்தனை தோழிகள் ..."
மீசை முளைக்க ஆரம்பித்த பொழுதில்
கேட்ட கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை ...
- நாகா
No comments:
Post a Comment