Tuesday, September 4, 2018

30-03-2017 வியாழன் ஒற்றையடி பாதையில்: 26 தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
30-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதையில்: 26
தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
லாந்தர் விளக்கும் லக்ஷ்மண சாமியும் ....
ராத்திரி நேரம்
புழக்கடை போகையில்
அவன்தான் எடுத்துட்டு வருவான் ..
தனிமையில் லாந்தர் துணையோடு
நடக்க ஆரம்பிச்சது அப்போதான் ....
கோலபொடி போட்டு நல்லா
துடைச்சு வெச்ச விளக்கில்
என்னை ஊற்றி எரியவைக்கிற வேலை எனக்கு ...
நடுவில் வெச்சிட்டு
சுத்தி உட்கார்ந்துப்போம் ...
லக்ஷ்மணசாமிகிட்ட கோனார் தமிழ் உரை
பாப்புலர் கைடோட நான்
கணக்கு புக்க வெறுமனே
பிரிச்சு வெச்சுக்கிட்டு தம்பி ...
நாங்க படிக்கறதா நம்பின வீடு
கத்திகப்பலும் திருடன் போலீசும்
ராஜா ராணி ஆட்டத்திலும்
புள்ளி வச்சு கோலம் போடும் எங்க
பால்யகாலத்து டிராயர் நினைவுகள் ....
அரிக்கேன் விளக்கின் வெளிச்சம்
சுவரில் தெரியும் சிங்கம் யானை
கை விரல்களில் ஓவியம் தீட்டும்
லக்ஷ்மணசாமியின் அசாத்திய திறமை
விட்டில் பூச்சியாய் எங்களை தொட்டு போகும் ...
ஒரு மழை இரவில்
புழக்கடை போகையில்
அரவம் தீண்டி அடங்கிப்போனது
லக்ஷ்மணசாமியின் ஆவி..
லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில்
திருக்குறளும் நாலடியாரும்
சத்தம்போட்டு படிப்பதை
அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது
அந்த மண் சுவர்...
உதிர்ந்து விழுந்த எழுத்துக்களில்
நனைந்திருந்தது லக்ஷ்மணசாமியின் கண்ணீர்...
- நாகா

No comments:

neelam enbathu song