Tuesday, September 4, 2018

05-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதை : 4 தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....


RJ Naga
05-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதை : 4
தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....
ஊதாக்கலர் ரிப்பனுக்கு
பூப்போட்ட அரக்கு கலர் பாவாடை ..
ரெட்டைஜடை பின்னலுக்கு
ஒய்யாரமா மஞ்சக்கலர் தாவணி...
கடைசி பெஞ்சுல
செவனோ கிளாக் பிளேடால
கீரிவச்ச எம் பேரு ......
தட்டாமாலை சுத்தமா
அவ நெனப்பு தூங்காது ...
கொசுறு ஒண்ணு வாங்காம
சிறுக்கி கண்ணு மூடாது...
ஜாமென்ட்ரி பாக்ஸுக்குள்ள
வெச்சிருப்பா அர நெல்லிக்கா ..
பாதி கடிச்சு தண்ணி குடிக்க
தித்திக்கும் அவ நெனப்பு ..
கொடுக்கப்புளி சிநேகத்தில
எச்சில் பட்டா தப்பு இல்ல...
ஜென்மத்தை டம்பளர்ல
ஊத்தி நானும் குடிக்கப்போறேன் ..
ஆலமர பொந்துக்குள்ள
கிளியாட்டம் தங்கப்போறேன் ...
உள் நீச்சல் அடிக்கையிலே
கைய பிடிச்சுப்பா ..
சைக்கிள் மிதிக்கையிலே
வரப்போரம் பார்த்துப்பா...
ஆம்பளையா பொறந்திருந்தா
கண்ணாலம் கட்டிப்பேனு
கண்ணடிச்சு கைபுடிப்பா ...
இறுமாப்பு இல்லாம
சகஜமா தான் பேசிக்கோவோம் ...
கம்மங்கூழு கருவாட்டுகொழம்பா
பக்குவமா பழகிக்கோவோம் ...
மொட்டைமாடி வத்தலாட்டம்
காயறது என் பொழப்பு
காம்பவுண்டு செடி போல
தலைநீட்டுறது அவ பொழப்பு ...
எங்க போனாளோ இன்னும் தெரியல
பச்சை தாவணியும் இன்னும் சாயம் போகல...
தாகம் ஒண்ணு தொண்டைக்குள்ள
கட்டுப்பட்டு நிக்குது
தாயம் ஒண்ணு விழுந்துபுட்டா
பாம்பு ஒண்ணு கொத்துது ....
- நாகா

No comments:

neelam enbathu song