Monday, September 3, 2018

02-07-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 91 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
02-07-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 91
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு வெற்றிடத்தை
இட்டு நிரப்புகிறது காற்று ...
காற்று நிரம்பிய பலூனை போல
மிதக்கிறது அதன் இருப்பு...
நீர்குமிழியின் பிரதிபலிப்பில்
உரசிச்செல்லும் அதன் விளிம்புகளில்
உடைந்து ஏதுமில்லாமல்
கரையும் அதன் அத்வைதம்
சொல்லாமல் சொல்லலாம்
உடைதலும் உன்னதமானவை ....
இனம் புரியாத வாசனை
அடையாளப்படுத்தலாம்
பெயர் தெரியாத பூவை ....
காற்றில் விரல் நீட்டி பறிக்க தோன்றும்
ஈரத்தின் கனம் தாங்காமல்
தரைத்தொடும் இயலாமையில்
முட்டி மோதி எழ எத்தனிக்கிறது காம்புகள்...
சோப்பு நுரைகளில் பறக்கும்
தட்டான்களைப்போல பிடிக்க எத்தனிக்கும்
விரல்களின் தொடுதலில்
உடையும் அதன் சூல் கொண்ட மௌனம் ....
- நாகா

No comments:

neelam enbathu song