Tuesday, September 4, 2018

23-05-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 66 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
23-05-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 66
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கள் புஜ்ஜிமா
காகம் வரைந்தாள் ...
நீல வண்ணத்தில் சிவப்பு அலகில்
கொய்யாப்பழம் சாப்பிட்டது அது ...
அவள் காகம் என்றதால்
நாங்களும் அதனுடன் சேர்ந்து
பறக்க ஆரம்பித்தோம் ...
அவள் வரைந்த தோட்டத்தில்
பின்தொடர்ந்தன பட்டாம்பூச்சிகள் ...
கொம்புகள் முளைத்த சிங்கங்களும்
தந்தங்கள் வைத்த மாடுகளுமாக
அலைந்தது அவள் காடு ...
வனம் முழுக்க அவள் இறைத்த
விண்மீன்களுக்கு தூண்டில் போட
சிக்கிக்கொண்டோம் நாங்கள்.....
மீன்கள் இழுக்க விழ ஆரம்பித்தோம்
ஒவ்வொருவராக...
வண்ணங்களால் நிரம்பும்
அந்த முழுமையில்
தூரிகையாகி கொண்டிருந்தோம் ...
ஒரு கைதேர்ந்த ஓவியக்காரியின்
சகல சாதுரியத்தையும்
விரல்களில் சலங்கையாக்கி
அபிநயிக்கிறாள் ஓவியங்களாக...
அடவு கட்டாத அந்த கணத்தில்
அர்த்தப்பட்டுக் கொள்கிறது வாழ்க்கை ..
- நாகா

No comments:

neelam enbathu song